Saturday, February 10, 2018

பாடல் பெற்ற தலங்கள் - கொங்கு நாட்டு தலங்கள்


திருப்புக்கொளியூர்


பாடல் பெற்ற தலம் - திருப்புக்கொளியூர்
தேவார பாடல் பெற்ற தலம் எண்: 259
கொங்கு தலம் எண்: 1
மற்ற பெயர்கள்: அவிநாசி
மாவட்டம்: திருப்பூர்
இறைவன்: அவிநாசிநாதர், பெருங்கேடிலியப்பர்
இறைவி:  கருணாம்பிகை
தல விருட்சம்: பாதிரிமரம்
மொத்த பதிகங்கள்: 1
தீர்த்தம்: காசிக்கிணறு, நாககன்னிகைத் தீர்த்தம், ஐராவதத் தீர்த்தம்


சில தகவல்கள்:
* பஞ்சதாண்டவ தலம்.
* சுந்தரர் பாடல் பெற்ற தலம் 
* இறைவன் சுயம்பு மூர்த்தி
* வசிஷ்டர் வணங்கி சனிதோஷம் நீங்கப்பெற்ற தலம்
* முதலை வாயிலிருந்து சிறுவனை மீட்ட தலம்
* அம்மன் சந்நிதியின் பின்புறம் விருச்சிகம் உள்ளது
* திருப்புகழ் பாடல் பெற்ற தலம்
* ஏழு நிலை ராஜகோபுரம்
* மிகவும் சிறப்பு வாய்ந்த தேர் உள்ள திருத்தலம்
* தென்கயிலாயம் என்ற பேர் பெற்றது
* சூரியன், சந்திரன், சுந்தரர், முருகன், விநாயகர், நாயன்மார் சந்நிதிகள் உள்ளன

தரிசன நேரம்: 
காலை 5 முதல்  1 வரை மற்றும் மாலையில் 4 முதல் 8 வரை

செல்லும் வழி:
கோவையிலிருந்து நாற்பது கி.மீ தூரம். ஏராளமான பேருந்து வசதி உள்ளது



பதிகங்கள்:
எற்றால் மறக்கேன், எழுமைக்கும் எம்பெருமானையே? உற்றாய் என்று உன்னையே உள்குகின்றேன், உணர்ந்து உள்ளத்தால்;புற்று ஆடு அரவா! புக்கொளியூர் அவிநாசியேபற்றுஆக வாழ்வேன்; பசுபதியே! பரமேட்டியே! - சுந்தரர்

புகைப்படங்கள்:







திருமுருகன்பூண்டி

பாடல் பெற்ற தலம் - திருமுருகன்பூண்டி 
தேவார பாடல் பெற்ற தலம் எண்: 260
கொங்கு தலம் எண்: 2
மற்ற பெயர்கள்: மாதவிவனம்
மாவட்டம்: திருப்பூர்
இறைவன்: திருமுருகநாதர்
இறைவி: ஆவுடை நாயகி
தல விருட்சம்: குருக்கத்தி, வில்வம்
மொத்த பதிகங்கள்: 1
தீர்த்தம்: சண்முகதீர்த்தம், ஞானதீர்த்தம், பிரம்ம தீர்த்தம்


சில தகவல்கள்:
* முருகப்பெருமான் இறைவனை வணங்கிய தலம்
* சுந்தரர் இவ்வழியே சென்றபொழுது பூதகணங்களை வேடர்களாக ஏவி பொருள் பிரித்த பதி
* சுந்தரர் பாடல் பெற்ற தலம்
* இறைவன் சுயம்பு மூர்த்தி
* சூரியன், சந்திரன், சுந்தரர், முருகன், விநாயகர், சந்நிதிகள் உள்ளன
* பில்லி சூனியம் தீர்க்கும் தலம்.
* இறைவன், இறைவி மேற்கு நோக்கிய தலம்

தரிசன நேரம்: 
காலை 5:30 முதல் 1 வரை மற்றும் மாலையில் 3:30 முதல் 8 வரை

செல்லும் வழி:
அவிநாசியிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. ஏராளமான பேருந்து வசதி உள்ளது


பதிகங்கள்:
கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர், விரவலாமை சொல்லி
திடுகு மொட்டு னெக் குத்தி, கூறை கொண்டு, ஆறுஅலைக்கும் இடம்
முடுகு நாறிய வடுகர் வாழ் முருகன்பூண்டி மா நகர்வாய்,
இடுகு நுண்இடை மங்கைதன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே! - சுந்தரர்


புகைப்படங்கள்:





திருநணா

பாடல் பெற்ற தலம் - திருநணா
தேவார பாடல் பெற்ற தலம் எண்: 261
கொங்கு தலம் எண்: 3
மற்ற பெயர்கள்: பவானி
மாவட்டம்: ஈரோடு
இறைவன்: சங்கமநாதர்
இறைவி:  வேதநாயகி
தல விருட்சம்: இலந்தை
மொத்த பதிகங்கள்: 1
தீர்த்தம்: காவிரி, பவானி


சில தகவல்கள்:
* சம்பந்தர் பாடல் பெற்ற தலம் 
* இறைவன் சுயம்பு மூர்த்தி
* ஆங்கில கலெக்டர் தந்த கட்டில் பரிசளித்த தலம்
* சம்பந்தர் அடியார் சுரம் நீங்கப்பெற்ற தலம்
* திருப்புகழ் பாடல் பெற்ற தலம்
* 5 நிலை ராஜகோபுரம்
* பெருமாள் மற்றும் தாயார் சந்நிதியும் உள்ளது
* நாகதோஷ பரிகார தலம்

தரிசன நேரம்: 
காலை 5:30 முதல்  1 வரை மற்றும் மாலையில் 4 முதல் 8 வரை

செல்லும் வழி:
ஈரோட்டில் இருந்து சுமார் 15 கி.மீ தூரம். ஏராளமான பேருந்து வசதி உள்ளது



பதிகங்கள்:
பந்து ஆர் விரல் மடவாள் பாகமா, நாகம் பூண்டு, ஏறுஅது ஏறி,அம் தார் அரவு அணிந்த அம்மான் இடம்போலும்---அம் தண்சாரல்வந்து ஆர் மடமந்தி கூத்துஆட, வார் பொழிலில் வண்டு பாட,செந்தேன் தெளி ஒளிர, தேமாங்கனி உதிர்க்கும் திரு நணாவே  - சம்பந்தர்

புகைப்படங்கள்:








கொடிமாடச்செங்குன்றூர்


பாடல் பெற்ற தலம் - கொடிமாடச்செங்குன்றூர்
தேவார பாடல் பெற்ற தலம் எண்: 262
கொங்கு தலம் எண்: 4
மற்ற பெயர்கள்: திருச்செங்கோடு
மாவட்டம்: ஈரோடு
இறைவன்: அர்த்தநாரீசுவரர்
இறைவி:  பாகம்பிரியாள்
தல விருட்சம்: இலுப்பை,வன்னி
மொத்த பதிகங்கள்: 1
தீர்த்தம்: தேவதீர்த்தம்


சில தகவல்கள்:
* சம்பந்தர் பாடல் பெற்ற தலம் 
* இறைவன் சுயம்பு மூர்த்தி
* விறன்மிண்ட நாயனார் அவதாரத் தலம்
* 1200 படிகள் கொண்டது. படி ஏற முடியாதோர் பேருந்து வசதியை பயன்படுத்தலாம்
* திருப்புகழ் பாடல் பெற்ற தலம். செங்கோட்டு வேலவர் சந்நிதி மிக பிரசித்தம்
* பெருமாள் மற்றும் தாயார் சந்நிதியும் உள்ளது 

தரிசன நேரம்: 
காலை 5:30 முதல்  1 வரை மற்றும் மாலையில் 4 முதல் 8 வரை

செல்லும் வழி:
ஈரோடு, சேலம், நாமக்கல் போன்ற ஊர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது





பதிகங்கள்:
வெந்தவெண்நீறு அணிந்து, விரிநூல் திகழ் மார்பில் நல்ல
பந்து அணவும் விரலாள் ஒருபாகம் அமர்ந்துஅருளி,
கொந்து அணவும் பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் நின்ற
அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பாரே  - சம்பந்தர்

புகைப்படங்கள்:








திருப்பாண்டிக்கொடுமுடி

பாடல் பெற்ற தலம் - திருப்பாண்டிக்கொடுமுடி
தேவார பாடல் பெற்ற தலம் எண்: 264
கொங்கு தலம் எண்: 6
மற்ற பெயர்கள்: கொடுமுடி
மாவட்டம்: ஈரோடு
இறைவன்: மகுடேஸ்வரர், கொடுமுடிநாதர்
இறைவி:  திரிபுர சுந்தரி
தல விருட்சம்: வன்னி
மொத்த பதிகங்கள்: 3
தீர்த்தம்: தேவதீர்த்தம்


சில தகவல்கள்:
* சம்பந்தர், அப்பர் மற்றும் சுந்தரர் பாடல் பெற்ற தலம் 
* இறைவன் சுயம்பு மூர்த்தி
* பெருமாள் மற்றும் தாயார் சந்நிதியும் உள்ளது 

தரிசன நேரம்: 
காலை 5:30 முதல்  12 வரை மற்றும் மாலையில் 4 முதல் 8 வரை

செல்லும் வழி:
ஈரோட்டில் இருந்து 40 சுமார் கி.மீ தூரம். ஏராளமான பேருந்து வசதி உள்ளது






பதிகங்கள்:
பெண் அமர் மேனியினாரும், பிறை புல்கு செஞ்சடையாரும்,
கண் அமர் நெற்றியினாரும், காது அமரும் குழையாரும்,
எண் அமரும் குணத்தாரும், இமையவர் ஏத்த நின்றாரும்,
பண் அமர் பாடலினாரும்---பாண்டிக்கொடுமுடியாரே.
  - சம்பந்தர்


சிட்டனை, சிவனை, செழுஞ்சோதியை,அட்டமூர்த்தியை, ஆலநிழல் அமர்பட்டனை, திருப் பாண்டிக்கொடுமுடிநட்டனை, தொழ, நம் வினை நாசமே - அப்பர்  

மற்றுப் பற்று எனக்கு இன்றி, நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்;
பெ(ற்)றலும் பிறந்தேன்; இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்;
கற்றவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரில் பாண்டிக்கொடுமுடி
நல்-தவா! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே - சுந்தரர் 

புகைப்படங்கள்:




வெஞ்சமாங்கூடலூர்

பாடல் பெற்ற தலம் - வெஞ்சமாங்கூடலூர்
தேவார பாடல் பெற்ற தலம் எண்: 263
கொங்கு தலம் எண்: 5
மற்ற பெயர்கள்: வெஞ்சமாக்கூடல்
மாவட்டம்: கரூர்
இறைவன்: கல்யாண விகிர்தேஸ்வரர்
இறைவி:  பண்ணேர் மொழியம்மை
தல விருட்சம்: வில்வம்
மொத்த பதிகங்கள்: 1
தீர்த்தம்: விகிர்த தீர்த்தம், குடவனாறு


சில தகவல்கள்:
* சுந்தரர் பாடல் பெற்ற தலம் 
* இறைவன் சுயம்பு மூர்த்தி
* வெஞ்சமன் என்னும் வேட்டுவ மன்னன் ஆண்ட தலம்
* கிழக்கு நோக்கிய தலம்
* வெள்ளத்திற்கு பின் மீண்டும் கட்டப்பட்ட கோவில்
* முருகர், நாயன்மார், லிங்கோத்பவர், பிரம்மன் சந்நிதிகள் உள்ளன

தரிசன நேரம்: 
காலை 7 முதல்  12 வரை மற்றும் மாலையில் 4 முதல் 8 வரை

செல்லும் வழி:
கரூரிலிருந்து இருந்து 20 சுமார் கி.மீ தூரம். குறைவான பேருந்து வசதி மட்டுமே உள்ளது




பதிகங்கள்:
எறிக்கும் கதிர் வேய் உதிர் முத்த(ம்)மொடு,ஏலம்(ம்), இலவங்கம், தக்கோலம், இஞ்சி,செறிக்கும் புனலுள் பெய்துகொண்டு, மண்டி,திளைத்து, எற்று சிற்றாறுஅதன் கீழ்க்கரைமேல்---முறிக்கும் தழை மா முடப்புன்னை, ஞாழல்,குருக்கத்திகள்மேல் குயில் கூவல் அறா,வெறிக்கும் கலைமா---வெஞ்சமாக்கூடல்விகிர்தா! அடியேனையும் வேண்டுதியே - சுந்தரர் 

புகைப்படங்கள்:














கரூர்

பாடல் பெற்ற தலம் - கரூர்
தேவார பாடல் பெற்ற தலம் எண்: 263
கொங்கு தலம் எண்: 5
மற்ற பெயர்கள்: கருவூர்
மாவட்டம்: கரூர்
இறைவன்: பசுபதீஸ்வரர்
இறைவி:  கிருபாநாயகி
தல விருட்சம்: வஞ்சி
மொத்த பதிகங்கள்: 1
தீர்த்தம்: தடாகைதீர்த்தம்


சில தகவல்கள்:
* சம்பந்தர் பாடல் பெற்ற தலம் 
* இறைவன் சுயம்பு மூர்த்தி
* திருப்புகழ் பாடல் பெற்ற தலம்
* கிழக்கு நோக்கிய தலம்
* முருகர், நாயன்மார், லிங்கோத்பவர், பிரம்மன் சந்நிதிகள் உள்ளன

தரிசன நேரம்: 
காலை 6 முதல்  12 வரை மற்றும் மாலையில் 4 முதல் 8 வரை

செல்லும் வழி:
கரூருக்கு அனைத்து ஊர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது




பதிகங்கள்:
தொண்டுஎலாம் மலர் தூவி ஏத்த, நஞ்சு
உண்ட ஆர்உயிர்ஆய தன்மையர்;
கண்டு அனார்---கருவூருள் ஆன்நிலை
அண்டனார், அருள் ஈயும் அன்பரே - 
சம்பந்தர்
புகைப்படங்கள்:











No comments:

Post a Comment