தேவார பாடல் பெற்ற தலம் எண்: 55
வடகரை தலம் எண்: 1
மற்ற பெயர்கள்: தில்லை, பெரும்பற்றப் புலியூர், தில்லைவனம்
மாவட்டம்: கடலூர்
தல விருட்சம்: தில்லைமரம்
தீர்த்தம்: சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம தீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு, குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல்
சில தகவல்கள்:
* சைவ சமயத்தில் கோவில் என்றாலே அது சிதம்பரம் தான்.
* பஞ்ச பூத தலங்களில் இது ஆகாய தலம்
* சோழ, பாண்டிய மற்றும் விஜயநகர அரசுகளின் கல்வெட்டுகள் கோவிலில் உள்ளன
* நால்வரால் பாடப்பெற்ற தலம்.
* வடக்கு கோபுரம் வழியாக சுந்தரர் வருகை புரிந்தார். இது கிருஷ்ணா தேவராயரால் கட்டப்பெற்றது.
* கிழக்கு கோபுரம் வழியாக மாணிக்கவாசகர் வருகை புரிந்தார். இது குலோத்துங்க சோழனால் கட்டப்பெற்றது.
* மேற்கு கோபுரம் வழியாக அப்பர் வருகை புரிந்தார். இது விக்கிரம சோழனால் கட்டப்பெற்றது.
* தெற்கு கோபுரம் வழியாக சம்பந்தர் வருகை புரிந்தார். இது காடவராயன் கோப்பெருஞ்சிங்கனால் கட்டப்பெற்றது.
* இறைவன் ஆகாயமாய் இருக்கிறான் என்பதே சிதம்பர ரகசியம்.
* திருக்கோவிலுள் திவ்யதேசம் திருச்சிற்றகூடம் உள்ளது. இறைவன் கோவிந்தராஜ பெருமாள் ஆவார்.
* தடைபட்ட தேரினை சேந்தனார் திருப்பல்லாண்டு பாடி ஓடச்செய்தார்
* ஐந்து சபைகள் உள்ளன.
* மூலவர் ஆதிமூலநாதர் ஆவார். அவருக்கு வியாக்ரபாத முனிவரும், பதஞ்சலி முனிவரும் துவாரபாலர்களாக உள்ளனர்.
* புகழ்பெற்ற நாட்டியாஞ்சலி இங்கு நடைபெறுகிறது
* மார்கழி திருவாதிரை முக்கிய திருவிழா
* பொன்னம்பலத்தில் ஒன்பது கலசங்கள், 21600 ஓடுகள், 72000 ஆணிகள் உள்ளன.
* திருமுறைகள் கண்டெடுக்கப்பட்ட தலம்.
* திருத்தலம் மாலிக் கஃபூரால் சூறையாடப்பட்டது.
தரிசன நேரம்:
காலை ஆறில் இருந்து 12 வரை மற்றும் மாலையில் 5 முதல் 10 வரை
செல்லும் வழி:
தமிழ்நாடு முழுவதும் இருந்து பேருந்து வசதி உண்டு. கும்பகோணம் மார்க்கம் செல்லும் ரயில்கள் அனைத்தும் சிதம்பரம் செல்லும்
என் குறிப்புகள்:
* எனது பால்ய வயதிலிருந்தே இந்த கோயிலை பற்றி எனது பாட்டி கதைகள் கூறுவார். ஒவ்வொரு வருடமும் தவறாமல் ஆருத்திரா தரிசனம் காணச்செல்வார்.
* எனது குடும்பத்துடன் சிறுவயதில் கோவிலுக்கு வந்துள்ளேன். தற்போது அடிக்கடி செல்லும் கோவில்.
* சிவகாமி சன்னதியில் அருகில் இருந்து பார்த்தால் ஒரே சமயத்தில் நான்கு கோபுரங்களையும் காணலாம்.
* ஒவ்வொரு முறையும் தெற்கு வாயிலை காணும் பொழுதெல்லாம் நந்தனார் நினைவு வருத்தும்.
* தற்போது முழுக்க வணிகமயமாய் மாறி உள்ளது திருக்கோவில் :-(
பதிகங்கள்:
வடகரை தலம் எண்: 1
மற்ற பெயர்கள்: தில்லை, பெரும்பற்றப் புலியூர், தில்லைவனம்
மாவட்டம்: கடலூர்
இறைவன்: திருமூலநாதர், கூத்தப்பெருமான்
இறைவி: சிவகாமிசுந்தரி தல விருட்சம்: தில்லைமரம்

அலையார் புனல்சூடி ஆகத்து ஒருபாகம்
மலையான் மகளோடும் மகிழ்ந்தான் உலகு ஏத்தச்
சிலையால் எயில் எய்தான் சிற்றம்பலம் தன்னைத்
தலையால் வணங்குவார் தலை ஆனார்களே - சம்பந்தர்
முட்டாத முச்சந்தி மூ ஆயிரவர்க்கும் மூர்த்தி என்னப்
பட்டானை பத்தராய்ப் பாவிப்பார் பாவமும் வினையும் போக
விட்டானை மலை எடுத்த இராவணனைத் தலைபத்தும் நெரியக் காலால்-
தொட்டானை புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே. - சுந்தரர்
கரும்பு அமரும் மொழி மடவாள் பங்கன் தன்னை
கனவயிரக் குன்றனைய காட்சி யானை
அரும்பு அமரும் பூங்கொன்றைத்தாரான் தன்னை
அருமறையோடு ஆறு அங்கம் ஆயினானை
சுரும்பு அமரும் கடிபொழில்கள் சூழ் தென் ஆரூர்ச்
சுடர்க்கொழுந்தைத் துளக்கில்லா விளக்கை, மிக்க
பெரும்பொருளைப் பெரும்பற்றப் புலியூரானை
பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே. - திருநாவுக்கரசர்
தில்லை மூதூர் ஆடிய திருவடிபுகைப்படங்கள்:
பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி
எண்ணில் பல்குணம் எழில்பெற விளங்கி
மண்ணும் விண்ணும் வானோர் உலகும்
துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும் - மாணிக்கவாசகர்
![]() |
| முகமண்டபம் |
![]() | |
| கிழக்கு கோபுரம் |
![]() |
| விநாயகர் சன்னிதி |
![]() |
| மேற்கு கோபுரம் |
![]() |
| வடக்கு கோபுரம் |
![]() |
| தெற்கு கோபுரம் |
![]() |
| உள்பிரகார ஓவியங்கள் |
![]() |
| அம்மன் சந்நிதி |
![]() |
| மேற்கு கோபுரம் |

No comments:
Post a Comment