Saturday, January 20, 2018

பாடல் பெற்ற தலம் - திருவிடைமருதூர்

தேவார பாடல் பெற்ற தலம் எண்: 147
தென்கரை தலம் எண்: 30
மற்ற பெயர்கள்: இடைமருது
மாவட்டம்: தஞ்சை
இறைவன்: மருதவாணர், மகாலிங்கேசர்
இறைவி:  பெருநலமுலையம்மை
தல விருட்சம்: மருத மரம்
மொத்த பதிகங்கள்:  12
தீர்த்தம்: காருண்ய அமிர்த தீர்த்தம், காவிரி


சில தகவல்கள்:
* வடக்கே ஸ்ரீ சைலம் வடமருது, தெற்கே திருப்புடைமருதூர் தென்மருது. இக்கோவில் இடைமருது கோவிலாகும்.
* சப்தஸ்தான தளங்களில் ஒன்று, பஞ்சகுரோசத்தலங்கலில் ஒன்று.
* மருத மரங்கள் நிறைந்த சோலையின் இடையே இருந்து இறைவன் தோன்றி உரோமச முனிவருக்கு காட்சி கொடுத்த தலம்.
* காசிக்கு சமமான ஆறு காவிரி தலங்களில் இதுவும் ஒன்று
* மூன்று பிரகாரங்கள். அசுவமேத பிரகாரம், கொடுமுடி பிரகாரம் மற்றும் பிரணவ பிரகாரமே அவை.
* மிகப்பெரிய சுதைநந்தி.
* இது நடுநாயகமான கோவில். சுற்றி சிறப்புமிக்க பல கோவில்கள் உள்ளன.
* வரகுண பாண்டியன் பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபட்ட ஆலயம்.
* சென்ற வாசல் வழியே திரும்பக்கூடாது என்று கூறப்படுகிறது.
* கோபுர வாசல்களில் பட்டினத்தாருக்கு, பத்திரகிரியாருக்கும் சிலைகள் உள்ளன.
* மூவர் பாடிய தலமிது.
* திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இக்கோவில் உள்ளது.

தரிசன நேரம்: 
காலை ஆறில் இருந்து 12 வரை மற்றும் மாலையில் 4 முதல் 8 வரை

செல்லும் வழி:
கும்பகோணம் - மயிலாடுதுறை பாதையில் உள்ளது.




பதிகங்கள்:

தோற்றவன் கேடவன் துணைமுலையாள்கூற்றவன் கொல்புலித் தோலசைத்தநீற்றவன் நிறைபுனல் நீள்சடைமேல்ஏற்றவன் வளநகர் இடைமருதே - சம்பந்தர்
வெந்த வெண்பொடிப் பூசும் விகிர்தனார்கந்த மாலைகள் சூடுங் கருத்தனார்எந்தை யென்னிடை மருதினில் ஈசனைச்சிந்தை யால்நினை வார்வினை தேயுமே - அப்பர்
அரைக்குஞ் சந்தனத் தோடகில் உந்தி
ஐவ னஞ்சுமந் தார்த்திரு பாலும்
இரைக்குங் காவிரித் தென்கரை தன்மேல்
இடைம ருதுறை எந்தைபி ரானை
உரைக்கும் ஊரன் ஒளிதிகழ் மாலை
உள்ளத் தால்உகந் தேத்தவல் லார்கள்
நரைப்பு மூப்பொடு நடலையும் இன்றி
நாதன் சேவடி நண்ணுவர் தாமே - சுந்தரர்
புகைப்படங்கள்:


பிரகார சுதை சிற்பங்கள் 

கிழக்கு கோபுரம்
பிரணவ பிரகாரம் 

சுதை சிற்பங்கள்

ஆலய தூண்கள்
நுழைவாயில் 



கோபுரம் 





No comments:

Post a Comment