Saturday, February 10, 2018

பாடல் பெற்ற தலங்கள் - கொங்கு நாட்டு தலங்கள்


திருப்புக்கொளியூர்


பாடல் பெற்ற தலம் - திருப்புக்கொளியூர்
தேவார பாடல் பெற்ற தலம் எண்: 259
கொங்கு தலம் எண்: 1
மற்ற பெயர்கள்: அவிநாசி
மாவட்டம்: திருப்பூர்
இறைவன்: அவிநாசிநாதர், பெருங்கேடிலியப்பர்
இறைவி:  கருணாம்பிகை
தல விருட்சம்: பாதிரிமரம்
மொத்த பதிகங்கள்: 1
தீர்த்தம்: காசிக்கிணறு, நாககன்னிகைத் தீர்த்தம், ஐராவதத் தீர்த்தம்


சில தகவல்கள்:
* பஞ்சதாண்டவ தலம்.
* சுந்தரர் பாடல் பெற்ற தலம் 
* இறைவன் சுயம்பு மூர்த்தி
* வசிஷ்டர் வணங்கி சனிதோஷம் நீங்கப்பெற்ற தலம்
* முதலை வாயிலிருந்து சிறுவனை மீட்ட தலம்
* அம்மன் சந்நிதியின் பின்புறம் விருச்சிகம் உள்ளது
* திருப்புகழ் பாடல் பெற்ற தலம்
* ஏழு நிலை ராஜகோபுரம்
* மிகவும் சிறப்பு வாய்ந்த தேர் உள்ள திருத்தலம்
* தென்கயிலாயம் என்ற பேர் பெற்றது
* சூரியன், சந்திரன், சுந்தரர், முருகன், விநாயகர், நாயன்மார் சந்நிதிகள் உள்ளன

தரிசன நேரம்: 
காலை 5 முதல்  1 வரை மற்றும் மாலையில் 4 முதல் 8 வரை

செல்லும் வழி:
கோவையிலிருந்து நாற்பது கி.மீ தூரம். ஏராளமான பேருந்து வசதி உள்ளது



பதிகங்கள்:
எற்றால் மறக்கேன், எழுமைக்கும் எம்பெருமானையே? உற்றாய் என்று உன்னையே உள்குகின்றேன், உணர்ந்து உள்ளத்தால்;புற்று ஆடு அரவா! புக்கொளியூர் அவிநாசியேபற்றுஆக வாழ்வேன்; பசுபதியே! பரமேட்டியே! - சுந்தரர்

புகைப்படங்கள்:







திருமுருகன்பூண்டி

பாடல் பெற்ற தலம் - திருமுருகன்பூண்டி 
தேவார பாடல் பெற்ற தலம் எண்: 260
கொங்கு தலம் எண்: 2
மற்ற பெயர்கள்: மாதவிவனம்
மாவட்டம்: திருப்பூர்
இறைவன்: திருமுருகநாதர்
இறைவி: ஆவுடை நாயகி
தல விருட்சம்: குருக்கத்தி, வில்வம்
மொத்த பதிகங்கள்: 1
தீர்த்தம்: சண்முகதீர்த்தம், ஞானதீர்த்தம், பிரம்ம தீர்த்தம்


சில தகவல்கள்:
* முருகப்பெருமான் இறைவனை வணங்கிய தலம்
* சுந்தரர் இவ்வழியே சென்றபொழுது பூதகணங்களை வேடர்களாக ஏவி பொருள் பிரித்த பதி
* சுந்தரர் பாடல் பெற்ற தலம்
* இறைவன் சுயம்பு மூர்த்தி
* சூரியன், சந்திரன், சுந்தரர், முருகன், விநாயகர், சந்நிதிகள் உள்ளன
* பில்லி சூனியம் தீர்க்கும் தலம்.
* இறைவன், இறைவி மேற்கு நோக்கிய தலம்

தரிசன நேரம்: 
காலை 5:30 முதல் 1 வரை மற்றும் மாலையில் 3:30 முதல் 8 வரை

செல்லும் வழி:
அவிநாசியிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. ஏராளமான பேருந்து வசதி உள்ளது


பதிகங்கள்:
கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர், விரவலாமை சொல்லி
திடுகு மொட்டு னெக் குத்தி, கூறை கொண்டு, ஆறுஅலைக்கும் இடம்
முடுகு நாறிய வடுகர் வாழ் முருகன்பூண்டி மா நகர்வாய்,
இடுகு நுண்இடை மங்கைதன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே! - சுந்தரர்


புகைப்படங்கள்:





திருநணா

பாடல் பெற்ற தலம் - திருநணா
தேவார பாடல் பெற்ற தலம் எண்: 261
கொங்கு தலம் எண்: 3
மற்ற பெயர்கள்: பவானி
மாவட்டம்: ஈரோடு
இறைவன்: சங்கமநாதர்
இறைவி:  வேதநாயகி
தல விருட்சம்: இலந்தை
மொத்த பதிகங்கள்: 1
தீர்த்தம்: காவிரி, பவானி


சில தகவல்கள்:
* சம்பந்தர் பாடல் பெற்ற தலம் 
* இறைவன் சுயம்பு மூர்த்தி
* ஆங்கில கலெக்டர் தந்த கட்டில் பரிசளித்த தலம்
* சம்பந்தர் அடியார் சுரம் நீங்கப்பெற்ற தலம்
* திருப்புகழ் பாடல் பெற்ற தலம்
* 5 நிலை ராஜகோபுரம்
* பெருமாள் மற்றும் தாயார் சந்நிதியும் உள்ளது
* நாகதோஷ பரிகார தலம்

தரிசன நேரம்: 
காலை 5:30 முதல்  1 வரை மற்றும் மாலையில் 4 முதல் 8 வரை

செல்லும் வழி:
ஈரோட்டில் இருந்து சுமார் 15 கி.மீ தூரம். ஏராளமான பேருந்து வசதி உள்ளது



பதிகங்கள்:
பந்து ஆர் விரல் மடவாள் பாகமா, நாகம் பூண்டு, ஏறுஅது ஏறி,அம் தார் அரவு அணிந்த அம்மான் இடம்போலும்---அம் தண்சாரல்வந்து ஆர் மடமந்தி கூத்துஆட, வார் பொழிலில் வண்டு பாட,செந்தேன் தெளி ஒளிர, தேமாங்கனி உதிர்க்கும் திரு நணாவே  - சம்பந்தர்

புகைப்படங்கள்:








கொடிமாடச்செங்குன்றூர்


பாடல் பெற்ற தலம் - கொடிமாடச்செங்குன்றூர்
தேவார பாடல் பெற்ற தலம் எண்: 262
கொங்கு தலம் எண்: 4
மற்ற பெயர்கள்: திருச்செங்கோடு
மாவட்டம்: ஈரோடு
இறைவன்: அர்த்தநாரீசுவரர்
இறைவி:  பாகம்பிரியாள்
தல விருட்சம்: இலுப்பை,வன்னி
மொத்த பதிகங்கள்: 1
தீர்த்தம்: தேவதீர்த்தம்


சில தகவல்கள்:
* சம்பந்தர் பாடல் பெற்ற தலம் 
* இறைவன் சுயம்பு மூர்த்தி
* விறன்மிண்ட நாயனார் அவதாரத் தலம்
* 1200 படிகள் கொண்டது. படி ஏற முடியாதோர் பேருந்து வசதியை பயன்படுத்தலாம்
* திருப்புகழ் பாடல் பெற்ற தலம். செங்கோட்டு வேலவர் சந்நிதி மிக பிரசித்தம்
* பெருமாள் மற்றும் தாயார் சந்நிதியும் உள்ளது 

தரிசன நேரம்: 
காலை 5:30 முதல்  1 வரை மற்றும் மாலையில் 4 முதல் 8 வரை

செல்லும் வழி:
ஈரோடு, சேலம், நாமக்கல் போன்ற ஊர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது





பதிகங்கள்:
வெந்தவெண்நீறு அணிந்து, விரிநூல் திகழ் மார்பில் நல்ல
பந்து அணவும் விரலாள் ஒருபாகம் அமர்ந்துஅருளி,
கொந்து அணவும் பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் நின்ற
அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பாரே  - சம்பந்தர்

புகைப்படங்கள்:








திருப்பாண்டிக்கொடுமுடி

பாடல் பெற்ற தலம் - திருப்பாண்டிக்கொடுமுடி
தேவார பாடல் பெற்ற தலம் எண்: 264
கொங்கு தலம் எண்: 6
மற்ற பெயர்கள்: கொடுமுடி
மாவட்டம்: ஈரோடு
இறைவன்: மகுடேஸ்வரர், கொடுமுடிநாதர்
இறைவி:  திரிபுர சுந்தரி
தல விருட்சம்: வன்னி
மொத்த பதிகங்கள்: 3
தீர்த்தம்: தேவதீர்த்தம்


சில தகவல்கள்:
* சம்பந்தர், அப்பர் மற்றும் சுந்தரர் பாடல் பெற்ற தலம் 
* இறைவன் சுயம்பு மூர்த்தி
* பெருமாள் மற்றும் தாயார் சந்நிதியும் உள்ளது 

தரிசன நேரம்: 
காலை 5:30 முதல்  12 வரை மற்றும் மாலையில் 4 முதல் 8 வரை

செல்லும் வழி:
ஈரோட்டில் இருந்து 40 சுமார் கி.மீ தூரம். ஏராளமான பேருந்து வசதி உள்ளது






பதிகங்கள்:
பெண் அமர் மேனியினாரும், பிறை புல்கு செஞ்சடையாரும்,
கண் அமர் நெற்றியினாரும், காது அமரும் குழையாரும்,
எண் அமரும் குணத்தாரும், இமையவர் ஏத்த நின்றாரும்,
பண் அமர் பாடலினாரும்---பாண்டிக்கொடுமுடியாரே.
  - சம்பந்தர்


சிட்டனை, சிவனை, செழுஞ்சோதியை,அட்டமூர்த்தியை, ஆலநிழல் அமர்பட்டனை, திருப் பாண்டிக்கொடுமுடிநட்டனை, தொழ, நம் வினை நாசமே - அப்பர்  

மற்றுப் பற்று எனக்கு இன்றி, நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்;
பெ(ற்)றலும் பிறந்தேன்; இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்;
கற்றவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரில் பாண்டிக்கொடுமுடி
நல்-தவா! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே - சுந்தரர் 

புகைப்படங்கள்:




வெஞ்சமாங்கூடலூர்

பாடல் பெற்ற தலம் - வெஞ்சமாங்கூடலூர்
தேவார பாடல் பெற்ற தலம் எண்: 263
கொங்கு தலம் எண்: 5
மற்ற பெயர்கள்: வெஞ்சமாக்கூடல்
மாவட்டம்: கரூர்
இறைவன்: கல்யாண விகிர்தேஸ்வரர்
இறைவி:  பண்ணேர் மொழியம்மை
தல விருட்சம்: வில்வம்
மொத்த பதிகங்கள்: 1
தீர்த்தம்: விகிர்த தீர்த்தம், குடவனாறு


சில தகவல்கள்:
* சுந்தரர் பாடல் பெற்ற தலம் 
* இறைவன் சுயம்பு மூர்த்தி
* வெஞ்சமன் என்னும் வேட்டுவ மன்னன் ஆண்ட தலம்
* கிழக்கு நோக்கிய தலம்
* வெள்ளத்திற்கு பின் மீண்டும் கட்டப்பட்ட கோவில்
* முருகர், நாயன்மார், லிங்கோத்பவர், பிரம்மன் சந்நிதிகள் உள்ளன

தரிசன நேரம்: 
காலை 7 முதல்  12 வரை மற்றும் மாலையில் 4 முதல் 8 வரை

செல்லும் வழி:
கரூரிலிருந்து இருந்து 20 சுமார் கி.மீ தூரம். குறைவான பேருந்து வசதி மட்டுமே உள்ளது




பதிகங்கள்:
எறிக்கும் கதிர் வேய் உதிர் முத்த(ம்)மொடு,ஏலம்(ம்), இலவங்கம், தக்கோலம், இஞ்சி,செறிக்கும் புனலுள் பெய்துகொண்டு, மண்டி,திளைத்து, எற்று சிற்றாறுஅதன் கீழ்க்கரைமேல்---முறிக்கும் தழை மா முடப்புன்னை, ஞாழல்,குருக்கத்திகள்மேல் குயில் கூவல் அறா,வெறிக்கும் கலைமா---வெஞ்சமாக்கூடல்விகிர்தா! அடியேனையும் வேண்டுதியே - சுந்தரர் 

புகைப்படங்கள்:














கரூர்

பாடல் பெற்ற தலம் - கரூர்
தேவார பாடல் பெற்ற தலம் எண்: 263
கொங்கு தலம் எண்: 5
மற்ற பெயர்கள்: கருவூர்
மாவட்டம்: கரூர்
இறைவன்: பசுபதீஸ்வரர்
இறைவி:  கிருபாநாயகி
தல விருட்சம்: வஞ்சி
மொத்த பதிகங்கள்: 1
தீர்த்தம்: தடாகைதீர்த்தம்


சில தகவல்கள்:
* சம்பந்தர் பாடல் பெற்ற தலம் 
* இறைவன் சுயம்பு மூர்த்தி
* திருப்புகழ் பாடல் பெற்ற தலம்
* கிழக்கு நோக்கிய தலம்
* முருகர், நாயன்மார், லிங்கோத்பவர், பிரம்மன் சந்நிதிகள் உள்ளன

தரிசன நேரம்: 
காலை 6 முதல்  12 வரை மற்றும் மாலையில் 4 முதல் 8 வரை

செல்லும் வழி:
கரூருக்கு அனைத்து ஊர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது




பதிகங்கள்:
தொண்டுஎலாம் மலர் தூவி ஏத்த, நஞ்சு
உண்ட ஆர்உயிர்ஆய தன்மையர்;
கண்டு அனார்---கருவூருள் ஆன்நிலை
அண்டனார், அருள் ஈயும் அன்பரே - 
சம்பந்தர்
புகைப்படங்கள்:











Friday, January 26, 2018

பாடல் பெற்ற தலம் - பேணுபெருந்துறை

தேவார பாடல் பெற்ற தலம் எண்: 181
தென்கரை தலம் எண்: 64
மற்ற பெயர்கள்: திருப்பந்துறை
மாவட்டம்: தஞ்சை
இறைவன்: சிவானந்தேஸ்வரர், பிரணவேஸ்வரர்
இறைவி:  மங்களாம்பிகை,மலையரசி
தல விருட்சம்: வன்னி
மொத்த பதிகங்கள்:  1
தீர்த்தம்: மங்கள தீர்த்தம்


சில தகவல்கள்:
* ஊமையாகிய முருகனுக்கு பேச்சு மீண்டும் வந்த தலம்
* சம்பந்தர் பாடிய தலம். 
* கிழக்கு நோக்கிய சந்நிதி.
* மூன்று நிலை கோபுரம்
* இரட்டை விநாயகர் சந்நிதி உள்ளது
* கரிகாற்சோழன் காலத்தில் இது செங்கற்கோயிலிலிருந்து கற்கோயிலாகியது
* தண்டபாணி சுவாமியின் அபிஷேக தேனை நாற்பத்தைந்து நாட்கள் பருகி வர பேச்சு குறைபாடு நிவர்த்தி.


எனது குறிப்புகள்:
* இந்த கோவிலுக்கு இரண்டு முறை பகல்பொழுதில் சென்ற பொழுது மூடி இருந்தது. ஒரு முறை குருக்கள், பூஜை முடிந்து நடை சாத்திவிட்டு வரும்பொழுது சென்றதால் இறைவனை காண முடியவில்லை. இந்த முறை மாலை பொழுதில் சென்றதால், கோவில் திறந்திருந்தது. ஆனால் குருக்கள் இல்லை. ☺
* இத்தலத்திற்கு மிகஅருகில் நாச்சியார் கோவில் உள்ளது. 108 திவ்யதேசங்களில் இதுவும் ஒன்று

தரிசன நேரம்: 
காலை 8 முதல்  12 வரை மற்றும் மாலையில் 5 முதல்  வரை

செல்லும் வழி:
கும்பகோணம் நாச்சியார்கோவிலை அடுத்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அரிசிலாற்றின் தென் கரையில் அமைந்துள்ளது.




பதிகங்கள்:
நிலனொடு வானும் நீரொடு தீயும் வாயுவும் ஆகி ஓர் ஐந்துபுலனொடு வென்று பொய்ம்மைகள் தீர்ந்த புண்ணியர் வெண்பொடிப் பூசிநலனொடு தீங்கும் தான் அலது இன்றி நன்கு எழு சிந்தையர் ஆகிமலனொடு மாசும் இல்லவர் வாழும் மல்கு பெருந்துறையாரே. - திருஞானசம்பந்தர்

புகைப்படங்கள்:









Tuesday, January 23, 2018

பாடல் பெற்ற தலங்கள் - கோவிலூர், இடும்பாவனம் மற்றும் கடிக்குளம்


எனது குறிப்புகள்:

ஆங்கில புத்தாண்டு(2018) அன்று அதிகாலை நாலரை மணிக்கெல்லாம் சீர்காழியிலிருந்து புறப்பட்டு(Bike) ஏழு மணி போல் கடிக்குளம் அடைந்தேன். காரைக்கால் - நாகப்பட்டினம் பாதை தவிர மீதி பாதை முழுதும் சிறப்பாகவே உள்ளது. குறிப்பாக நாகை முதல் முத்துப்பேட்டை வரையிலான ஈசிஆர் ரோடு உயர்தரம். கடிக்குளத்திலிருந்து இடும்பாவனம் வெறும் ஒரு கிமீ தொலைவுதான். இடும்பாவனத்திலிருந்து மந்திரபுரி(கோவிலூர்) பத்து மைல் தொலைவு. கடிக்குளத்திலும் இடும்பாவனத்திலும் அர்ச்சகர்கள் நான் சென்ற நேரத்தில் இல்லை.


கோவிலூர் எனும் திருவுசாத்தானம்


தேவார பாடல் பெற்ற தலம் எண்: 224
தென்கரை தலம் எண்: 107
மற்ற பெயர்கள்: மந்திரபுரி
மாவட்டம்: திருவாரூர்
இறைவன்: மந்திரபுரீஸ்வரர் 
இறைவி:  பெரியநாயகி
தல விருட்சம்: மாமரம்  
மொத்த பதிகங்கள்:  1
தீர்த்தம்: அனுமன், மார்க்கண்டேய, கௌதம தீர்த்தங்கள்


சில தகவல்கள்:
* சம்பந்தர் பாடிய தளம்
* மூலவர் சுயம்புமூர்த்தி
* பல்வேறு சோழர்கள், பாண்டிய மன்னர் கல்வெட்டுகள் உள்ளன
* 14 தேவரடியார் பற்றிய கல்வெட்டுகளும் உள்ளன
* ராமன் சிவபெருமானிடம் மந்திர உபதேசம் பெற்றதால் இவ்வாலய ஈசன் மந்திரபுரீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்
* எமனால் ஏற்பட்ட வடுக்கள் நீங்க மார்க்கண்டேயர் இவ்வாலய தீர்த்தத்தில்  நீராடினார்
* சூதவனம் என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது
* விசுவாமித்திரருக்கு சிவபெருமான் நடனக்காட்சி அளித்த தலம் 
* ராஜகோபுரம் ஐந்து நிலைகள் உள்ளது. உள்ளே உள்ளே கோபுரம் கட்டை கோபுரம் என்று அழைக்கப்படுகிறது

தரிசன நேரம்: 
காலை ஆறில் இருந்து 12 வரை மற்றும் மாலையில் 4 முதல் 9 வரை

செல்லும் வழி:
முத்துப்பேட்டையில் இருந்து 2 கி.மீ. வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன





பதிகங்கள்:
கொல்லை ஏறு உடையவன், கோவணஆடையன்,பல்லை ஆர் படுதலைப் பலி கொளும் பரமனார்,முல்லை ஆர் புறவு அணி முது பதி---நறை கமழ்தில்லையான் உறைவுஇடம்  திரு உசாத்தானமே - சம்பந்தர்

புகைப்படங்கள்:

















இடும்பாவனம்


தேவார பாடல் பெற்ற தலம் எண்: 225
தென்கரை தலம் எண்: 108
மற்ற பெயர்கள்: வில்வவனம்
மாவட்டம்: திருவாரூர்
இறைவன்: இடும்பவனேஸ்வரர், சற்குணநாதர்  
இறைவி:  மங்களவல்லி
தல விருட்சம்: வில்வம் 
மொத்த பதிகங்கள்:  1
தீர்த்தம்: அகத்திய தீர்த்தம், பிரம தீர்த்தம், இமய தீர்த்தம்


சில தகவல்கள்:
இடும்பன் வழிபட்ட தலம்
* இடும்பன் சகோதரி இடும்பையை வீமன் மணந்ததால் வியாச முனிவரின் ஆணைப்படி இடும்பாவனம் என் பெயர் பெற்றது 
* அகத்தியருக்கு இறைவன் திருமண கோலம் காட்டிய இடம்
* பிரமன், எமன், ராமன் வழிபட்ட தலம்
* பித்ரு வழிபாடு தலம்
* சம்பந்தருக்கு மணல்கள் எல்லாம் சிவலிங்கமாக தெரிந்ததால் தலைகீழாக நடந்து இத்தலத்தை அடைந்தார்
மூலவர் சுயம்பு 


தரிசன நேரம்: 
காலை 7:30 இருந்து 12:30 வரை மற்றும் மாலையில் 4:30 முதல் 8:30 வரை

செல்லும் வழி:
திருத்துறைப்பூண்டியில் இருந்து 12 கி.மீ. வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன





பதிகங்கள்:

மனம் ஆர்தரு மடவாரொடு மகிழ் மைந்தர்கள் மலர் தூய்,தனம் ஆர்தரு, சங்கக் கடல் வங்கத்திரள் உந்தி,சினம் ஆர்தரு திறல் வாள்எயிற்று அரக்கன் மிகு, குன்றில்இன மா தவர் இறைவர்க்கு இடம்  இடும்பாவனம் இதுவே
 - சம்பந்தர்  



புகைப்படங்கள்:










கடிக்குளம்


தேவார பாடல் பெற்ற தலம் எண்: 226
தென்கரை தலம் எண்: 109
மற்ற பெயர்கள்: கற்பகநாதர் குளம் 
மாவட்டம்: திருவாரூர்
இறைவன்: கற்பகநாதர், கற்பகேஸ்வரர்
இறைவி:  பாலசவுந்தரியம்மை
தல விருட்சம்: பலா 
மொத்த பதிகங்கள்:  1
தீர்த்தம்: விநாயக தீர்த்தம்

சில தகவல்கள்:
மூலவர் சுயம்பு
* இறைவன் எட்டுபட்டைகளுடன் உள்ளார்
* சுவாமி கிழக்கு நோக்கி தரிசனம்
* கற்பகவிநாயகர் இறைவனை வேண்டி மாங்கனி பெற்ற தலம்
* இராமன் வழிபட்ட தலம்.

* விநாயகர், கஜலக்ஷ்மி, நால்வர், பைரவர் சன்னதிகள் உள்ளன
* அருகில்(2 KM) தொலைவில் உள்ள துளசியம்பட்டினத்தில் அவ்வை சன்னதி உள்ளது 

தரிசன நேரம்: 
காலை 6 இருந்து 12 வரை மற்றும் மாலையில் 4 முதல் 8 வரை

செல்லும் வழி:
திருத்துறைப்பூண்டியில் இருந்து 13 கி.மீ. வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன





பதிகங்கள்:

விண்களார் தொழும் விளக்கினை, துளக்கு இலா விகிர்தனை, விழவு ஆரும்மண்களார் துதித்து அன்பராய் இன்புஉறும் வள்ளலை, மருவி, தம்கண்கள் ஆர்தரக் கண்டு, நம் கடிக்குளத்து உறைதரு கற்பகத்தைப்பண்கள் ஆர்தரப் பாடுவார் கேடு இலர்; பழி இலர்; புகழ் ஆமே - சம்பந்தர் 

புகைப்படங்கள்: