Thursday, January 18, 2018

பாடல் பெற்ற தலம் - திருவெண்காடு

தேவார பாடல் பெற்ற தலம் எண்: 65
வடகரை தலம் எண்: 11
மற்ற பெயர்கள்: ஆதிசிதம்பரம்
மாவட்டம்: நாகப்பட்டினம்
இறைவன்: வெண்காடர், சுவேதாரண்யேஸ்வரர்
இறைவி:   வேயனைய தோளுமை,  ப்ரம்ம வித்யா நாயகி
தல விருட்சம்: வடவால், கொன்றை, வில்வம்
தீர்த்தம்: சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள்

சில தகவல்கள்:
*  சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற தலம்
* சிவபெருமானை வணங்கி தோஷம் நீங்கியதால் புதன் நவகிரக தலமாக விளங்குகிறது.
* சிவபெருமான் ஹஸ்தி நடனம் ஆடிய இடம்.
* திருவெண்காட்டில் இயற்பகை நாயனார், மெய்கண்டார்,  பட்டினத்தடிகள் வாழ்ந்துள்ளனர்.
* அகோரமூர்த்தி வடிவமெடுத்து மருத்துவன் என்னும் அரக்கனை அழித்த இடம். ஆனால் அட்டவீரட்டத்தில் இந்த தலம் இல்லை.
* வால்மீகி ராமாயணத்தில் இந்த கோயிலை பற்றிய குறிப்பு உள்ளது
* முதல் ஆதித்தன், முதல் பராந்தகன், உத்தம சோழன் கல்வெட்டுகள் உள்ளன.
* காசிக்கு சமமாய் கருதப்படும் தலம்.
* கிழக்கு நோக்கி இறைவன் மற்றும் இறைவன் சன்னதி உள்ளது
* நாயன்மார்கள், விஷ்ணு, தட்சிணாமூர்த்தி, நவகிரக, விநாயகர், முருகர், காளி, சட்டநாதர்  சிலைகள் உள்ளன
* இறைவன் சுயம்பு மூர்த்தி
* ஈசன் ஒன்பது தாண்டவங்கள் புரிந்த இடம்.

தரிசன நேரம்: 
காலை ஆறில் இருந்து 12 வரை மற்றும் மாலையில் 5 முதல் 9 வரை

செல்லும் வழி:
சீர்காழி மற்றும் மயிலாடுதுறையில்(மாயவரத்தில்) இருந்து பேருந்து வசதி உள்ளது



என் குறிப்புகள்:
* சீர்காழியிலிருந்து மிக அருகில் உள்ளதால் நிறைய முறை சென்ற ஆலயம் இது. எனது திருமணத்திற்கு முன் எனது நண்பன் மூலமாக முதல் முறை  வந்துள்ளேன். அதற்கு பின் பல முறை இத்தல இறைவனை காண முடிந்தது.
* சென்ற வாரம் செல்கையில் நிறைய மருவத்தூர் பக்தர்களை காண முடிந்தது.
* புதன் ஸ்தலத்தில் நிறைய கூட்டம் இருந்தது.

பதிகங்கள்:
நாதன்! நம்மை ஆள்வான்! என்று நவின்று ஏத்தி,பாதம் பல்-நாள் பணியும் அடியார்கள்தங்கள்மேல்ஏதம் தீர இருந்தான் வாழும் ஊர்போலும்வேதத்து ஒலியால் கிளி சொல் பயிலும் வெண்காடே - திருஞானசம்பந்தர் 
படம் கொள் நாகம் சென்னி சேர்த்தி, பாய் புலித்தோல் அரையில் வீக்கி,
அடங்கலார் ஊர் எரியச் சீறி, அன்று மூவர்க்கு அருள் புரிந்தீர்;
மடங்கலானைச் செற்று உகந்தீர்; மனைகள்தோறும் தலை கை ஏந்தி
விடங்கர் ஆகித் திரிவது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே - சுந்தரர்
ஏன வேடத்தி னானும் பிரமனும்
தான வேடமுன் தாழ்ந்தறி கின்றிலா
ஞான வேடன் விசயற்கு அருள்செயும்
கான வேடன்றன் வெண்காடு அடைநெஞ்சே - அப்பர் 

புகைப்படங்கள்: 

மேற்கு கோபுரம் 

அகோரமூர்த்தி(வெளி பிரகாரம்)

கிழக்கு கோபுரம் 

முன்மண்டப நுழைவு வாயில்


நந்தி




சுவரோவியம் 

தட்சிணாமூர்த்தி 

நால்வர் சன்னிதி

லிங்கோத்பவர் 

கருவறை வெளியே கல்வெட்டு 

நடராஜர் சபை  

அகோரமூர்த்தி சன்னிதி 

உள் பிரகாரம்
                                                                             மேற்கு கோபுரம் 

                                                                                   புதன் தலம் 
                                               
                          அம்மன் சன்னிதி


No comments:

Post a Comment